சிஎஸ்கே நிர்வாகி, சுரேஷ் ரெய்னாவை மெகா ஏலத்தில் வாங்க மறுத்த காரணம் பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் ஐபிஎல் 15-வது சீசனுக்கான மெகா ஏலம் நடைபெற்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 பேரை தட்டி தூக்கியது. இதில் ஏற்கனவே தோனி, ருதுராஜ், ஜடேஜா,மொயின் அலி ஆகியோரை அந்த அணி தக்க வைத்துள்ளது. இந்த மெகா ஏலத்தில் சிஎஸ்கே 21 வீரர்களை வாங்கியுள்ளது. ஆனால் இவர்களை வாங்கிய பிறகும் ரூ.2.85 கோடி மீத தொகை இருந்தது. ஆனால் இந்த தொகையில் சுரேஷ் ரெய்னாவை வாங்கி இருக்கலாம் . சிஎஸ்கே அந்த தொகையை மிச்சப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சிஎஸ்கேவில் தோனிக்கு அடுத்து அதிக ரசிகர்களை சுரேஷ் ரெய்னா பெற்றுள்ளார். அது மட்டுமல்ல அதிக ரன்களை சிஎஸ்கேவுக்காக குவித்துள்ளார். இந்நிலையில் சிஎஸ்கே அவரை மெகா ஏலத்தில் கண்டுகொள்ளாமல் இருந்தது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியதாவது, சுரேஷ் ரெய்னா கடந்த 12 வருடங்களாக சிஎஸ்கேவின் முக்கிய வீரராக திகழ்ந்து வந்துள்ளார்.
இவரை ஏலம் எடுக்காதது எங்களுக்கு மிகவும் வருத்தமாக தான் இருந்தது. ஏனெனில் அணியின் தேவையை கருத்தில் கொண்டு மட்டும்தான் செயல்பட முடியும் என்று கூறினார். மேலும் நாங்கள் தேர்வு செய்து வைத்திருந்த அணியில், சுரேஷ் ரெய்னாவிற்கான தேவை இருப்பதாக தெரியவில்லை. எனவே தான் அவரை வாங்கவில்லை என கூறினார். இதனையடுத்து சுரேஷ் ரெய்னா, ஃபாஃப் டூபிளஸி இருவரையும் சிஎஸ்கேவின் அனைவரும் மிஸ் பண்ணுவோம் என்று கூறியுள்ள அவர், இவர்களது இடத்தை நிரப்புவது நிச்சயம் எளிதானது கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.