தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 1,634-லிருந்து 1,325-ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனாவால் 14 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 37,946-ஆக உள்ளது.
கொரோனா காரணமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,368-ஆக உள்ளது. 5,894 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 33,69,907 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு 303-ஆக உள்ளது.