விஜய் டிவி பிரபலமான ரக்ஷிதா, தினேஷ் விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீப காலத்தில் நட்சத்திர ஜோடிகள் விவாகரத்து செய்வது என்பது மிகவும் அதிகரித்துள்ளது. அதாவது சமந்தா மற்றும் நாக சைதன்யா, தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா போன்ற சினிமா நட்சத்திரங்களின் விவாகரத்து எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை தொடர்ந்து மேலும் ஒரு புதிய ஜோடிகள் விவாகரத்து செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் சரவணன், மீனாட்சி சீரியலில் பிரபலமான ரக்ஷீதா தன்னுடன் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வருவதன் காரணமாக இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக இவர்கள் தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் பிரிய போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியது. தொடர்ந்து அவருக்கு நெருங்கியவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் இவர்கள் இருவரும் எப்போதும் போலத்தான் இருக்கிறார்கள். இது வெறும் வதந்தி தான் என கூறியிருக்கிறார்கள்.