Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்…. இப்படி தான் தேர்வு நடக்க போகுது?…. சூப்பர் தகவல்….!!!

தமிழகத்தில் அனைத்து அரசு துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் தொடர்பான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதையடுத்து மற்ற துறைகளை அடுத்து ரேஷன் கடைகளிலும் காலிப் பணியிடங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகள் வாயிலாக மக்கள் வீட்டு உபயோக பொருட்களை மலிவு விலையில் பெற்று வருகின்றனர். கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் 21 வகையான மளிகை பொருட்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பொருட்கள் விநியோகத்தில் கால தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக பொருட்களை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. அதன்படி ரேஷன் கடைகளில் காலியாகவுள்ள 3,803 பணியிடங்களை வேலைவாய்ப்பு முகாம் மூலமாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 23,502 முழுநேரம் ரேஷன் கடைகள், 9639 பகுதி நேர ரேஷன் கடைகள் என்று மொத்தம் 33,141 கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த ரேஷன் கடைகளில் 3,176 விற்பனையாளர், 627 கட்டுநர் பணியிடங்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் வாயிலாக பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரே பணியாளர் 2-க்கு மேற்பட்ட முழு நேர ரேஷன் கடைகளை பொறுப்பேற்று செயல்படுத்தி வருவது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்ட பணிகளை திறமையாக செயல்படுத்துவதற்கு இடையூறாக அமையும். ஆகவே முழு நேர ரேஷன் கடையின் விற்பனையாளர் கூடுதலாக ஒரேயொரு முழு நேர ரேஷன் கடையின் பொறுப்பினை மட்டுமே வகித்து வருவதை இணை பதிவாளர்கள் உறுதிபடுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Categories

Tech |