Categories
Uncategorized தேசிய செய்திகள்

” ஏழுமலையான் பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!” இனி ஈஸியா தரிசிக்கலாம்…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தீவிர கொரோனா பரவல் காரணமாக தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் கொடுக்கப்பட்டு வந்தன. இதனால் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்ய தெரியாதவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அதோடு தேவஸ்தானம் ஒரு மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டை அந்த மாத தொடக்கத்தின் முதல் நாள் வெளியிடுவது வழக்கம். அவ்வாறு வெளியிடப்படும் போது பத்து நிமிடத்திற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்படும். இதனால் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தெரியாதவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் வைரஸ் பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து தரிசன டிக்கெட்டுகளை நேரடியாக கொடுக்கலாம் என தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி திருப்பதி ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை, கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் நாளை காலை 9 மணி முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் கொடுக்கப்பட உள்ளன. பக்தர்கள் ஆதார் கார்டை கொடுத்துவிட்டு டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வரும் புதன்கிழமை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் எனவும் தேவஸ்தானம் கூறியுள்ளது.

Categories

Tech |