மருத்துவ கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரியின் முதல்வர் ரேவதி பாலன் , துணை முதல்வர் சரவணன், துணைத் துணைத்தலைவர்கள், மற்றும் 100 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் புதிதாக சேர்ந்த மாணவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்தி மாணவர்கள் பற்றியும் கேட்டறிந்து மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வரவேற்றுள்ளார்.