முத்தாலம்மன் கோவில் தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கெடார் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் கடந்த 7-தேதி அன்று தொடங்கி 11-ஆம் தேதி சக்தி கரக ஊர்வலம், சாகை வார்த்தல் நிகழ்ச்சி, செல்லியம்மன் குதிரை புறப்பாடு, இரவு நேரத்தில் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா 12-ஆம் தேதி மாலை மேளக்கச்சேரியும், இரவில் முத்துப் பல்லக்கில் அம்மன் வீதி உலாவும் நடந்தது.
பின்பு இரவு 12 மணி அளவில் முத்தாலம்மன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி வாணவேடிக்கையுடன் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு கெடார் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.