பழமையான குளத்தை தூய்மைப்படுத்த வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெருவங்கூர் என்ற கிராமத்தில் பழமையான குளம் ஒன்று உள்ளது. அந்தப் பகுதி மக்கள் அந்த குளத்தில் இருந்துதான் பயன்பாட்டிற்காக தண்ணீர் எடுத்துள்ளனர். ஆனால் அந்த குளத்தில் கழிவு நீர் கலப்பதால் சில ஆண்டுகளாக அந்த நீரை உபயோகப்படுத்த முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் குளத்தை தூய்மைபடுத்த நிதி வேண்டும் என்பதை வலியுறுத்தி காத்திருப்பு மற்றும் கையேந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குளத்தை தூய்மைப்படுத்தாத ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.