சென்னை கோட்டூர்புரம் சித்ரா குடிசை மாற்று வாரிய குடியிருபில் குமரன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சார்லி ஜான் என்ற நண்பர் இருக்கிறார். இவர்கள் இருவரும் நேற்று இரவு 12 மணி அளவில் காலி இடத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதயயடுத்து சித்ரா குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் F பிளாக்கில் 3 மாடிகள் உள்ள குடியிருப்பின் மொட்டை மாடிக்கு இருவரும் சென்றுள்ளனர்.
அதன்பின் மொட்டை மாடியில் வைத்து இருவருமே கட்டிப்பிடித்து ஒருவரை ஒருவர் தள்ளி மீண்டும் சண்டை போட்டுள்ளனர். அப்போது இருவரும் நிலைதடுமாறி 30 அடி உயரமுள்ள 3-வது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளனர். இதனால் குமரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சார்லி ஜான் அருகேயுள்ள மரத்தில் விழுந்ததால் அவரது கால் முறிந்தது. தற்போது சார்லி ஜான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.