மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சில பகுதிகள் சிவப்பு விளக்கு பகுதிகள் ஆகும். இந்த பகுதிகளில் பாலியல் தொழில் நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் உள்ள பெண்கள் பலர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் மும்பையிலுள்ள புதுவார்பேட்டும் ஒரு சிவப்பு விளக்கு பகுதி ஆகும். இந்த பகுதிக்கு ராஜப்பா என்ற 45 வயது நபர் ஒருவர் பெண் பாலியல் தொழிலாளி ஒருவரை நாடி வந்துள்ளார்.
ராஜப்பா அந்த பெண்ணுடன் பாலுறவு வைத்துக்கொள்ள குறைந்த விலைக்கு பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ராஜப்பா அந்த பெண்ணின் மார்பகத்தை பிளேடால் கிழித்துள்ளார். ரத்தம் கொட்டிய நிலையில் அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.