Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்…. மீண்டும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்றவாறு, எரிப்பொருள் விலையை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்ய அரசு அனுமதித்தது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இதன் காரணமாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது ஏற்றம், இறக்கத்துடன் இருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் 103 வது நாளாக விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 101.40-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், உ.பி உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுக்கு பிறகு பெட்ரோல்ல், டீசல் விலையில் கட்டாயம் மாற்றம் இருக்கும். அதன் எதிரொலியாக வாடகை கார், ஆட்டோ, விமான பயணம் உள்ளிட்ட கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

Categories

Tech |