தொழிலாளியை தாக்கிய குற்றத்திற்காக தொழிலதிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் தலக்குளம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொத்து தரகராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் சுஜித் என்பவர் சட்ட விரோதமாக மணல் அள்ளியுள்ளார். இதனை பார்த்த மணிகண்டன் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் தெரிவித்துள்ளார். இதனை அறிந்து கொண்ட சுஜித் மணிகண்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது கோபமடைந்த சுஜித் இரும்பு கம்பியால் மணிகண்டனை பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் படுகாயமடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் சுஜித்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.