கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காட்டை அடுத்த செரடு என்ற பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 23). இவர் கடந்த 7ஆம் தேதி அன்று மாலை தனது நண்பர்களுடன் மலம்புழா பகுதியிலுள்ள மலைக்கு சென்றுள்ளார். மலை ஏறுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட பாபு அங்கு மலை ஏறும் போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதனால் செங்குத்தான பாறையின் இடையே சிக்கிக்கொண்டார்.
இதனை அடுத்து அந்த மலம்புழா பகுதிக்கு விமானப்படை, கடலோர பாதுகாப்பு படை மற்றும் ராணுவத்தின் மீட்பு குழுவினர் அனைவரும் வந்து சேர்ந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி மாலை பாறை இடுக்கில் சிக்கிக்கொண்ட பாபுவை, சுமார் 45 மணி நேர போராட்டத்திற்கு பின் 9 ஆம் தேதி காலையில் உயிருடன் மீட்டனர். இந்நிலையில் அவர்கள் இதற்காக ஹெலிகாப்டரில் சென்று பாறையில் சிக்கியிருந்த பாபுவை பத்திரமாக மீட்டுள்ளனர்.
இதனால் அவர்கள் பயன்படுத்திய ஹெலிகாப்டருக்கு வாங்கப்பட்ட ஒரு மணி நேர வாடகை மட்டும் ரூபாய் 2 லட்சம் ஆகும். அதன்படி ஹெலிகாப்டரின் மொத்த வாடகை ரூபாய் 50 லட்சம் எனவும், பணிக்குழுக்களுக்கு செலவான தொகை ரூபாய் 15 லட்சம் எனவும் கூறப்படுகிறது. இது போக இன்னும் சில செலவுகளுக்கான கணக்கை கேரள கருவூலத்திற்கு வழங்கப்பட்டுள்ளதால் மொத்தமாக சேர்த்து ரூபாய் 75 லட்சத்தை தாண்டும் என்று கூறப்படுகிறது.