Categories
தேசிய செய்திகள்

அடடே! 40 லட்சத்தில் கிருஷ்ணருக்கு கோவில்…. அசத்தும் இஸ்லாமியர்…. எதற்காக தெரியுமா…??

முஸ்லீம் ஒருவர் கிருஷ்ணர் கோவில் அமைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் தூங்கா எனும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில்நவ்சத் ஷேக் எனும் இஸ்லாமியர் சுமார்  40 இலட்சம் செலவில் பார்த்தசாரதி கோவில் என்னும் பெயரில் கிருஷ்ண பகவானுக்கு கோயில் ஒன்றை கட்டியுள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவர் தன் கனவில் கிருஷ்ணபகவான் வந்து தனக்கு  கோவில் கட்டும் படி கூறினார்  என சொல்கிறார்.  தற்போது கோயில் கட்டப்படும் இடம் அவருக்கு சொந்தமான இடமும் அல்ல அவர் வாழும் பகுதி அல்ல. அவர் கனவில் கிருஷ்ணன் தோன்றிய இடத்தை அவர் தேடி கண்டுபிடித்த போது அங்கே ஏற்கனவே ஒரு கிருஷ்ணர் சிலை  இருந்ததாகவும், அதற்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்ததாகவும்  தெரிகிறது.

பின்னர் அவர் அப்பகுதி மக்களிடம் பேசி ரூபாய் 40 லட்சம் செலவில் கோவிலை கட்டியுள்ளார். இந்த கோவிலுக்கு அடிக்கல் நாட்டியது முதல் கும்பாபிஷேகம் வரை அனைத்தும் இந்து மத சம்பிரதாயப்படி நடந்துள்ளது. மேலும் அவர் அதற்காக இஸ்லாமிய மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறவில்லை. இஸ்லாமை பின்பற்றிய நிலையிலேயே இந்த கோயிலையும் கட்டியுள்ளார் .இச்சம்பவம்  பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Categories

Tech |