நேற்று காதலர் தினத்திற்காக நயன்தாரா தனது காதலனான விக்னேஷ் சிவனுக்கு மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரல்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த “நானும் ரவுடி தான்” திரைப் படத்தில் நயன்தாரா நடித்த பொழுது இருவருக்கும் காதல் பூத்தது. இவர்களின் கல்யாணத்துக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து நிச்சயம் முடிந்துள்ள நிலையில் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றார்கள். இருவரும் ஓய்வு காலங்களில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்து வருவார்கள். இந்நிலையில் கொரோனாவின் தாக்கத்தினால் வெளிநாடுகளுக்கு செல்லவில்லை.
https://www.instagram.com/reel/CZ8y_2QvO7Y/?utm_source=ig_web_button_share_sheet
இதனால் விக்னேஷ் சிவன் தனது இணையதளப்பக்கத்தில் நயன்தாராவுடன் வெளிநாட்டுக்கு செல்வதை மிஸ் பண்ணுவதாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று காதலர் தினத்தையொட்டி நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு சிவப்பு ரோஜா மலர் கொத்தினை கொடுத்து கட்டியணைத்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். நயன் “முதல் முறைப்போல் பூக்கொத்து அளிப்பது மகிழ்ச்சியான ஒன்று.. காதலர் தினம்.. காத்துவாக்குல ஒரு காதல்..” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
இதன் கூடவே இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் விக்கி. இதற்கு தற்போது லைக்குகள் அதிகமாகிக்கொண்டே வருகின்றது மற்றும் இது வைரலாகி கொண்டிருக்கின்றது.