வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்ததில் வந்த பிரச்சனையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மராட்டிய மாநிலம் மும்பையில் சிவாஜி நகர் என்னும் பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த லீலாவதி தேவிபிரசாத் (வயது48). இவருக்கு 20 வயது நிறம்பிய மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் லீலாவதியின் மகள் தனது மொபைலில் நேற்று முன்தினம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்துள்ளார். இதனை அந்தப் பெண்ணின் தோழி பார்த்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இந்நிலையில் தோழி தன்னை பற்றி எழுதிய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து உள்ளார் என அந்த இளம்பெண் தன் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் உட்பட அனைவரும் லலிதா தேவி வீட்டிற்கு நேற்றுமுன்தினம் சென்றுள்ளனர். அங்கு இந்த பிரச்சினை தொடர்பாக அவரது குடும்பத்தினர்கள் மற்றும் லீலாவதி அவரது மகள் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் தாய் லீலாவதி மற்றும் அவரது மகளை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர்.மேலும் அங்கிருந்து அவர்கள் தப்பித்து ஓடினர். படுகாயமடைந்த லீலாதேவி அங்குள்ள சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து அந்த இளம் பெண்ணின் தாய் குடும்பத்தினர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.