Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குண்டும், குழியுமான சாலை… கோரிக்கை விடுத்த மக்கள்…. நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

  நீலகிரி மாவட்டத்தில் மூன்று மாநிலங்களை இணைக்கும் சாலைகளில்  குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்.

நீலகிரி மாவட்டம் கூடலூரிலிருந்து  கேரளா மாநிலத்திலுள்ள கோழிக்கோட்டிற்கு மாநில நெடுஞ்சாலை  செல்கிறது. இந்த  மாநில நெடுஞ்சாலை வழியாக   கர்நாடகாவிலிருந்து  தினமும் நிறையசரக்கு லாரிகள் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஏற்றி  கொண்டு  கேரளாவிற்கு செல்கிறது. இச்சாலை வழியாக  கூடலூருக்கு பந்தலூர் தாலுகாவை சேர்ந்த ஏராளமான மக்கள் தினமும்  தங்கள் பணிக்காக  வந்து செல்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல்  கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதி மக்கள் தங்கள் மருத்துவ வசதிக்காக இந்த சாலையை  பயன்படுத்தி கேரளாவுக்கு சென்று வருகிறார்கள். மேலும் கூடலூர், சாலை வழியாக சீசன் காலங்களில் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்குச் சென்று திரும்பி  வருகின்றார்கள்.

மேலும் இது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய  3 மாநிலங்களை இணைக்கும்  முக்கிய சாலையாகவும் விளங்குகிறது.இந்நிலையில் அந்த சாலை நீண்ட காலமாக மிகவும் பழுது அடைந்துள்ளதாலும், அதிக குண்டும்  குழியுமாக இருப்பதாலும் மக்கள் பெரும்பாதிப்படைந்து வருகிறர்கள் என்று அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கூறியுள்ளார்கள்.

இந்த சாலையை புதுப்பித்து தர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்கள். ஆனால் இந்த மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் தற்போதுவரை எடுக்கவில்லை. ஆகையினால் இந்த சாலையை சீரமைக்கும் பணியினை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துவங்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளார்கள்.

 

Categories

Tech |