மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வட்டார தேர்தல் பார்வையாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தேர்தல் பணியாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, தேர்தல் பார்வையாளர் தங்கவேல், 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளின் வட்டார தேர்தல் பார்வையாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கலுடன் அவசர சேவைக்காக கூடுதலாக 20 சதவீதம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முன்னிலையில் பொருத்தப்பட்டு உள்ளதாகவும், தேர்தலுக்கு தயாரான நிலையில் சிவகங்கை மாவட்டம் உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.