Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் படத்தின்…. “வெற்றி கொண்டாட்டம்”…. வைரலாகும் போட்டோ….!!!

விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்த மகான் படத்தின் கொண்டாட்டத்தின்  போது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 

திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவர் அவரது மகன் துருவ் விக்ரம் அவருடன் இணைந்து ‘மகான்’ திரைப்படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படத்தில் பாபி சிம்ஹா, வாணி போஜன், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நேபால், டார்ஜிலிங், சென்னை, கொடைக்கானல் போன்ற இடங்களில் எடுக்கப்பட்டன.

இப்படம் மூன்று மொழிகளில் நேரடியாக ஓடிடி தளத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி வெளியானது. மகான் திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜை போனில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில்  வைரலாகி பரவி வருகிறது.

Categories

Tech |