Categories
அரசியல்

“சிறையில் சொகுசு வசதி பெற லஞ்சம் கொடுத்த வழக்கு….!!”சசிகலாவுக்கு மீண்டும் நெருக்கடி….!!

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா நான்கு ஆண்டுகள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனைக் காலத்தில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சிறையில் சொகுசு வசதிகளை பெறுவதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு 2 கோடி வரை லஞ்சம் வழங்கியதாக அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த வழக்கு பெங்களூர் மாநகர 24 ஆவது அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி லக்ஷ்மி நாராயண பட், கிருஷ்ணகுமார், அனிதா, பி.சுரேஷா, கஜராஜா, ச‌சிகலா, இளவரசி ஆகிய 6 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதனால் சசிகலாவிற்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது இந்த வழக்கு தொடர்பாக சசிகலா மீண்டும் சிறையில் அடைக்கப்படுவாரா.? என அரசியல் நோக்கர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Categories

Tech |