தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு முன்பாக திருப்புதல் தேர்வு நடத்துவதற்கான கால அட்டவணையும் வெளியானது.
இந்த நிலையில் 12-ஆம் வகுப்பு கணிதம் பாடத்திற்கான திருப்புதல் தேர்வும், 10-ஆம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான திருப்புதல் தேர்வும் இன்று நடைபெற உள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் செல்போனில் 10, 12 ஆம் வகுப்பு வினாத்தாள் புகைப்படம் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது வருகிறது.
தற்போது வினாத்தாள்கள் தமிழகம் முழுவதும் சமூக வலைத்தளத்தில் பரவிக் கொண்டிருப்பதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தகவலை பகிரும் சமூக ஆர்வலர்களும், கல்வி ஆர்வலர்களும் பள்ளிக்கல்வித்துறை இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.