ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் நேற்று முடிவடைந்தது. இதில் அனைத்து அணிகளும் அடுத்த பத்து வருடங்களுக்கு தேவையான அணியை உருவாக்கும் விதமாக இளம் வீரர்களை அதிக தொகைக்கு போட்டி போட்டு வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக ஆவேஷ் கான், ஹர்சல் படேல், ராகுல் சஹார் , தீபக் ஹூடாஆகியோர் பெரிய தொகைக்கு ஏலம் போனார்கள்.
ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் தனது பழைய வீரர்களை எடுக்க ஆர்வம் காட்டியது. அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, டுவைன் பராவோ, ஆகியோர் வந்த போது மட்டும் மிக வேகமாக ஏலம் கேட்க ஆரம்பித்தனர். இவர்களுக்கு போட்டி எதுவும் இல்லை, அதனால் குறைந்த தொகைக்கு வாங்கி விட்டனர். இளம் உள் நாட்டு வீரர்கள் வந்தபோது சிஎஸ்கே நிர்வாகம் கண்டு கொள்ளவே இல்லை. அதிலும் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த கிஷோர், என் ஜெகதீசன் ஆகியோரையும் வாங்கவில்லை. ஒரு சில பெயர்கள் மட்டும் பெயருக்கு இளம் கேட்டுவிட்டு அமைதியாக இருந்தனர். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியது. இந்நிலையில் ஹர்ஷல் தாகூர் எலத்திற்கு வந்தார்.
பழைய வீரர்களை எடுக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் சிஎஸ்கே இவர்களும் கேட்க ஆரம்பித்தது. மற்றறொரு பக்கம் டெல்லியும் விடவில்லை. இதனால் இருதரப்புக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. முடிவில் டெல்லி கேப்பிடல் அணி 10.75 கோடிக்கு அவரை ஏலம் எடுத்துள்ளது. பழைய வீரர்களை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த சிஎஸ்கே வுக்கு இது பலத்த அடியாக தான் எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து தீபக் சாஹார் வந்துள்ளார் சிஎஸ்கே அணி இவரையும் விட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் நெருக்கடியில் இருந்துள்ளது.
இதனை அறிந்த எதிரணியினர் தீபக்கிற்கு ஏலத்தை திகரித்தனர். இருப்பினும் தீபக்கை 14 கோடிக்கு சிஎஸ்கே அணி ஏலம் எடுத்துள்ளது. முதல் நாளில் 40 கோடி ரூபாயில் 25 கோடி ரூபாயை செலவு செய்து 6 வீரர்களை மட்டும் வாங்கி உள்ளது. இதற்கு முன் தோனி, ஜடேஜா, ருதுராஜ் ஆகியோர் இருந்தனர் இதில் தோனி ,ராபின் உத்தப்பா, டுவைன் பிராவோ, மொயின் அலி இவர்கள் எல்லாம் இன்னும் சில வருடங்கள் மட்டுமே கிரிக்கெட் விளையாட முடியும் இருப்பினும் ஏன் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.