Categories
அரசியல்

“திமுகவிற்கு வாய்ஸ் மாஸ்டர் திருமாவளவன் தான்…!!” சும்மா போட்டுத்தாக்கிய ஜெயக்குமார்…!!

தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் பரப்புரையின் போது பேசியதாவது, “தமிழகத்தில் திமுக ஆட்சி தொடங்கிய எட்டு மாதங்களில் வன்முறைக் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. ரவுடிசமும் தீவிரவாதமும் படமெடுத்து ஆடுகின்றன. இவ்வாறு தமிழகத்தில் தலைதூக்கும் ரவுடிசதிற்கும் தீவிரவாதத்திற்கும் திருமாவளவன் தான் வாய்ஸ் கொடுக்கிறார். திமுகவுக்கு வாய்ஸ் மாஸ்டர் திருமாவளவன் தான். அதிமுகவினர் யாருக்கும் வாய்ஸ் மாஸ்டர் கிடையாது. இந்த தீவிரவாதத்திற்கும் வன்முறைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சட்டப்பேரவை முடக்கப்பட்டுள்ளது.” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Categories

Tech |