Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“பழிவாங்க நினைத்தோம்” இறுதி ஊர்வலத்தில் கலவரம்…. போலீஸ் விசாரணை…!!

இறுதி  ஊர்வலத்தின் போது தகராறில் ஈடுபட்ட குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பகுதிக்கு அடுத்த குடிமல்லூர் பஜனை கோவில் தெருவில் வசித்து வந்த முதியவர் ஒருவர் நேற்று முன்தினம்  காலமானார். இவரை அடக்கம் செய்வதற்காக  உறவினர்கள் உடலை எடுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் இறுதி ஊர்வலம் அகதிகள் வசிக்கும் பகுதிக்கு அருகில் சென்று  கொண்டிருந்தபோது அங்கு வசிக்கும் சிலர் தீடீரென தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குடிமல்லூர் பகுதியில் வசிக்கும் தினேஷ் மற்றும் முரளி ஆகியோர் காயமடைந்தனர். இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  காவல்துறையினர் அகதிகள்  முகாமைச் சேர்ந்த நிஷாந்தன், சுந்தரபாண்டியன், நவநீதன், வினோத்குமார் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சஜன், சங்கீத்,  கரண் ஆகிய மூன்று பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் பற்றி  காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குடிமல்லூர் பஜனை தெருவில் வசிக்கும்  ஒருவருக்கும்  அகதிகள் முகாமைச் சேர்ந்த சிலருக்கும் ஏற்கனவே  முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் பழி வாங்கும் நோக்கத்தோடு தக்க சமயத்தை எதிர்பார்த்து காத்திருந்த அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் இறுதி ஊர்வலத்தை பயன்படுத்திக் கொண்டு தகராறில் ஈடுபட்டது  முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Categories

Tech |