Categories
உலக செய்திகள்

“இது உண்மைக்குப் புறம்பான நியாயமற்ற வழக்கு”…. அவதிப்படும் தொழிலாளர்கள்…. பிரபல நிறுவனம் விளக்கம்….!!

கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் கருப்பின தொழிலாளர்கள் மீது இனப்பாகுபாடு காட்டப்படுவதாக வழக்கு போடப்பட்டுள்ளது. 

கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரத்தில் கார் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் ப்ரீமான் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 10,000திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கின்றனர்.

இந்த தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான கருப்பின தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களிடமிருந்து தொடர்ச்சியாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் டெஸ்லா நிறுவனத்தின் மீது சிவில் உரிமை சட்டங்களை செயல்படுத்த வேலைவாய்ப்பு மற்றும் வீட்டு வசதித்துறை அலமேடா  நீதிமன்றத்தில் இனப்பாகுபாடு வழக்கினை தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் டெஸ்லாவின் ப்ரீமான் தொழிற்சாலையில் பணிபுரியும் கருப்பின தொழிலாளர்கள் மீது இனப்பாகுபாடு, பாலியல் வன்முறைகள், இன அவதூறுகளுக்கு உள்ளாவதாக சட்ட வல்லுனர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை தொடர்ந்து கருப்பினத்தவர்களுக்கு வேலை ஒதுக்கீடு, ஊதியம், பதவி உயர்வு ஆகியவற்றிலும் பாகுபாடு காட்டப்படுவதை ஆதரங்களுடன் வால்ஸ்ட்ரீட் மற்றும் ப்ளூபெர்க் ஊடகங்கள் பதிவு செய்து வைத்து இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த இனப்பாகுபாடு வழக்கு குறித்து ப்ரீமான் தொழிற்சாலை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில் “இது உண்மைக்குப் புறம்பான நியாயமற்ற வழக்கு” என்று கூறியுள்ளது. இருப்பினும் டெஸ்லா நிறுவனம் இனப்பாகுபாடு வழக்குகளில் மாட்டியது முதல் முறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |