ஜப்பானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 52 தலைமுறையினர்களால் சுமார் 1300 வருடங்களாக உலகின் மிக பழமையான ஹோட்டல் ஒன்று இயங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானில் Nishiyama Onsen Keiunkan எனப்படும் ஹோட்டல் ஒன்று சுமார் 1300 ஆண்டுகளாக இயங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஹோட்டல் கிபி 750 ல் தொடங்கப் பட்டுள்ளதாகவும் இதனை ஒரே குடும்பத்தை சேர்ந்த 52 தலைமுறையினர்கள் நடத்திவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஹோட்டல் ஜப்பானிலுள்ள யமனாஷி பகுதியில் உள்ளதாகவும், அந்நாட்டிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கு செல்லாமல் வரவே மாட்டார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.