தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் புதிய தளர்வுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி திருமண நிகழ்ச்சிகள், இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகள், சமுதாய கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்றும், இந்த கட்டுப்பாடுகள் மார்ச் 2-ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் திருமண நிகழ்ச்சிகளில் 200 பேருக்கும், இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகளில் 100 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நர்சரி பள்ளி, பொருட்காட்சிகள், கலைவிழா, உணவகங்கள், விடுதிகள், துணிக்கடை, நகைக்கடை, ஜிம், திரையரங்கம், விளையாட்டு அரங்கம், சலூன், பூங்கா ஆகியவை 100% செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.