குறி செல்ல வந்தது போல் நடித்து பெண்ணிடம் 7 1/2 பவுன் தாங்க தாலியை பறித்துக்கொண்டு சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள சம்பூரணி கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி இந்திரா(55) வட்டானம் அருகே புதுக்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இந்திரா மற்றும் அவரது உறவினர்கள் சிலர் வீட்டின் முன்னால் அமர்ந்துகொண்டிருந்தனர். அப்போது குறி பார்ப்பதாக கூறி வந்த 25 வயது வாலிபரிடம் இந்திரா குறி பார்த்துள்ளார்.
இதனையடுத்து அந்த வாலிபர் சென்ற சிறிது நேரத்தில் இந்திராவின் கழுத்தில் இருந்த 7 1/2 பவுன் தங்க சங்கிலி காணாததை அவரது உறவினர்கள் பார்த்து இந்திராவிடம் கூறியுள்ளனர். இந்நிலையில் கூறி சொல்ல வந்த வாலிபர் இந்திராவிடம் தாலி சங்கிலியை கழற்றி கீழே வைக்க சொன்னதாகவும், அவர் தாலி சங்கிலியை கழற்றி கீழே வைத்த பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை என இந்திரா கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து குறி செல்ல வந்து நகையை பறித்துக்கொண்டு தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர்.