மெக்ஸிக்கோவில் கால்பந்து விளையாடும் பொழுது ஏற்பட்ட மோதலில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ, ஸகாடகாஸ் மாகாணத்தில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே கால்பந்து விளையாட்டு தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக சிறை நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் கைதிகள் குழுவாக இணைந்து கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது சில கைதிகள் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
பின் மோதலை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் ஆயுதங்களுடன் சிறைக்குள் நுழைந்தனர். அதற்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக மெக்சிகோ அரசு தெரிவித்துள்ளது. மேலும் சண்டை குறித்தும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் எப்படி கிடைத்தன என்பது குறித்தும் விரிவான விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.