சிஎஸ்கே அணி எவ்வளவோ போட்டிபோட்டும் கூட டெல்லி அணி ஷர்துலை 10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்ததுள்ளது.
ஐபிஎல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலம் நேற்று பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் கலந்துகொண்டுள்ளார்கள். மேலும் இதில் 217 வீரர்கள் ஏலமிடப்படவுள்ளார்கள்.
இவ்வாறு இருக்க சிஎஸ்கே அணி ஏற்கனவே டுபிளெசிஸை தவற விட்டதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திலுள்ளார்கள். இந்நிலையில் சிஎஸ்கே அணி எவ்வளவோ முயன்றும் கூட டெல்லி அணி கடைசி வரை விடாமல் ஷெர்துலை 10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதனால் ரசிகர்கள் மேலும் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.