தாய் ஒருவர் சேலைக்காக தன் மகனை பத்தாவது மாடியில் அந்தரத்தில் தொங்கவிட்ட வீடியோ சமூகத்தில் வைரலாக பரவியுள்ளது.
ஹரியானா மாநிலத்திலுள்ள பரிதாபாத்தில் செக்டர் 82 ல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு ஒன்பதாவது மாடியில் உள்ள வீட்டின் பால்கனியில் காய வைத்த சேலை விழுந்து விட்டதால் அதனை எடுப்பதற்காக தன் மகனை அந்தரத்தில் தொங்க வைத்து பலரையும் அதிர வைத்திருக்கிறார் இந்த தாய், மேலும் குடும்பத்தினரும் அவருக்கு உதவியாக இருந்திருக்கிறார்கள் .
பெட்ஷீட்டை கட்டி சிறுவனைக் கீழே இறங்கி உள்ளனர். அந்த சிறுவன் சேலை எடுத்த உடன் பெட்ஷீட்டை இறுக்கமாக பிடித்துக் கொள்கிறான். தவறுதலாக கொஞ்சம் விட்டாலும் அந்த சிறுவனின் நிலைமை என்ன ஆகும். இதனை எதிர்த்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த ஒருவர் அந்த காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். தற்போது அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி உள்ளது மேலும் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.