பெண் குழந்தைகளுக்காக முதலீடு செய்ய செல்வமகள் சேமிப்புத் திட்டம் என்பது ஒரு அற்புதமான வாய்ப்பு.இது பாதுகாப்பு மற்றும் ரிஸ்க் இல்லாத திட்டம் என்பது இதன் கூடுதல் சிறப்பாகும். இத்திட்டத்தில் பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் திட்டங்களை தொடங்கி முதலீடு செய்யலாம்.
மேலும் முதலீடு செய்வோருக்கு வரி சலுகைகளும் உண்டு.அது என்னவென்றால் வட்டி வருமானம் ,முதலீட்டுத் தொகையை,மெச்சூரிட்டி ஆகிய மூன்றுக்கும் வருமான வரி விலக்கு கிடைக்கிறது. இத்திட்டத்தில் தற்போது 7.6% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. பெண்குழந்தை 21 வது வயது வந்தவுடன் மெச்சூரிட்டி தொகை கிடைக்கும். மேலும் இதில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் தொகை கூட முதலீடு செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.
இந்த திட்டத்தை தொடங்குவதற்கு பெண் குழந்தைக்கு 10 வயது மிகாமல் இருக்க வேண்டும். இந்தியாவில் வசிக்கும் பெண் குழந்தையாக இருக்க வேண்டும். மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் இத்திட்டத்தின் மூலம் கணக்கு தொடங்கலாம். இத் திட்டத்தை தொடங்குவதற்கு தேவையான ஆவணங்களாக அடையாளச் சான்று ,முகவரிச் சான்று, குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ், குழந்தையின் புகை படம் அல்லது பெற்றோரின் புகைப்படம் ஆகியவை கொண்டு இத்திட்டத்தில் சேர விரும்புவோர் தபால் அலுவலகத்தில் அல்லது வங்கி கணக்கில் சென்று கணக்கு தொடங்கலாம்.