Categories
உலக செய்திகள்

ஃபாஸ்ட் !! இந்த நாட்டை விட்டு வெளியே போங்க…. பிரபல நாடு எச்சரிக்கை….!!

உக்ரைனில் இருக்கும் தனது குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு பல்வேறு நாடுகள் வலியுறுத்தியுள்ளது. 

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க திட்டம் போட்டுள்ளதா என்ற அச்சம் அனைவருக்கும் இருக்கும். இந்நிலையில் ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சகம் பிராந்தியத்தில் நடக்கும் போர்களை தவிர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து உக்ரைனின் உள்ள Donetsk நகரில் இருக்கும் தனது தூதரகத்தை மூடுவதாக அந்த அமைச்சகம் கூறியுள்ளது.

இந்நிலையில் தற்போது உக்ரைனில் இருக்கும் ஜெர்மன் நாட்டு குடிமக்கள் தங்களின் இருப்பு அவசியம் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் உக்ரேனை விட்டு வெளியேற வேண்டும் என்று ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா தனது குடிமக்களை உக்ரைனை விட்டு வெளியேறுமாறு கூறியதை அடுத்து ஜெர்மனியும் இவ்வாறு தெரிவித்துள்ளது. மேலும் பிரித்தானியா, டென்மார்க், லாட்வியா மற்றும் எஸ்டோனியா போன்ற நாடுகளும் உக்ரைனில் உள்ள தனது நாட்டு குடிமக்களை வெளியேறுமாறு அறிவுறுத்துள்ளது.

Categories

Tech |