Categories
தேசிய செய்திகள்

மருமகளின் உயிரை காப்பாற்றிய மாமனார்….!!இப்படியும் ஒரு மாமனிதர்…!!

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஜல்னா பகுதியை சேர்ந்த 25 வயது பெண் ஒருவருக்கு திடீரென சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதோடு உடலில் ஆங்காங்கே வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த பெண் மருத்துவரை அணுகிய போது அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததுவிட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த பெண்ணின் உயிருக்கே ஆபத்து நேரிடும் என்பதால் உடனடியாக சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து சிறுநீரகத்தை தானமாக வழங்க யாரும் முன்வராததால் அந்தப் பெண்ணின் மாமனாரே தன்னுடைய சிறுநீரகத்தை அந்தப் பெண்ணுக்கு தானமாக வழங்கியுள்ளார். தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு அவருடைய மாமனாரின் சிறுநீரகத்தை கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி மருத்துவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்தினர்.

Categories

Tech |