ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 30 பெண்கள் தொழிற்சாலையிலிருந்து வெளிவந்த அதிக அளவிலான நச்சுப் புகையை வாசித்ததால் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பெண்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சோனிபட் ஹூண்டாய் மெட்டல் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தொழிற்சாலையில் உள்ள உலோகங்களை உருக்கும் உலையிலிருந்து நச்சுவாயு வெளிவந்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த நச்சுவாயு தாக்கியதில் 30 பெண்கள் மயங்கி விழுந்து உள்ளனர். இவர்கள் தொழிற்சாலையில் உள்ள உலோகங்களை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.