இயக்குநர் பார்த்திபன் தான் இயக்கி நடிக்கும் அடுத்த படம் குறித்தான தகவலை வெளியிட்டார். அந்தப் படம் முழுவதும் ஒரே ஷாட்டில் எடுக்கப்போவதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டு வெளியான ‘ஒத்த செருப்பு சைஸ் 7′ திரைப்படத்தை இயக்கி நடித்த இயக்குநர் பார்த்திபன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.எப்போதும் புதிய முயற்சியில் ஈடுபடும் பார்த்திபன் தான் இயக்கி நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.’இரவின் நிழல்’ என பெயரிடப்பட்ட அந்த படத்தை பார்த்திபன் ஒரே ஷாட்டில் எடுக்கப்போகிறாராம். இப்படத்தின் டைட்டிலை இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
ஒத்த செருப்பு திரைப்படத்தின் மூலம் தமிழக இயக்குனர் வரிசையில் இருந்து உலக இயக்குனர் வரிசைக்கு தன் உயரத்தை உயர்த்திக் கொண்ட என் பாசத்துக்குரிய பார்த்திபன்.. இனிய புத்தாண்டு இன்று தொடங்கும் " இரவின் நிழல் " உலக விருதுகள் பல வென்றெடுத்து
தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை சேர்ப்பாய்— Bharathiraja (@offBharathiraja) January 1, 2020
மேலும் தமிழக இயக்குநர் வரிசையிலிருந்து உலக இயக்குநர் வரிசைக்கு பார்த்திபன் சென்றிருப்பதாக பாரதிராஜா தனது பதிவில் தெரிவித்தார். உலக விருதுகள் பல வென்று தமிழுக்கு பார்த்திபன் பெருமை சேர்பார் எனவும் பாரதிராஜா குறிப்பிட்டிருந்தார்.