இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள துவரஙகுறிச்சி அருகே வள்ளநாடு பகுதியில் இரண்டு வீடுகள் பூட்டி இருந்துள்ளது. இந்நிலையில் இரவு 10 மணி அளவில் இரண்டு வீடுகளின் பூட்டுகளை உடைத்து உள்ள புகுந்த மர்ம நபர்கள் மொத்தம் 18 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றனர். மறுநாள் காலை பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களின் விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.