Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சவாரிக்கு வராதது தப்பா….? டிரைவருக்கு அரிவாள் வெட்டு…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு….!!

சவாரிக்கு வர மறுத்த ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்துள்ள ரெகுநாதபுரம் பாண்டியன் நகரில் நவீன்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வரும் இவர் சம்பவத்தன்று இரவு கிருஷ்ணாபுரத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது இரண்டு மர்ம நபர்கள் ஆட்டோவை வழிமறித்து சவாரிக்கு அழைத்துள்ளனர். அதற்கு நவீன்குமார், தான் வீட்டிற்கு செல்வதாகவும், சவாரிக்கு வரமுடியாது எனவும் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் ஆட்டோவை சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், நவீன்குமாரை தகாத வார்த்தைகளால் பேசியும், அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதில் படுகாயமடைந்த நவீன்குமாரை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து நவீன்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |