Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா…! ஒரு பெட்டி மாம்பழத்தின் விலை ரூ.31,000…. இதுல அப்படி என்ன ஸ்பெஷல்…!!!!

ஒரு பெட்டி மாம்பழத்தை ரூபாய்  31,000 க்கு  வணிகர் ஒருவர் ஏலம் எடுத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேயில் உள்ள யுவராஜ் கச்சி என்னும் ஒரு வணிகர் 60 ஹாபூஸ் வகை  மாம்பழங்கள் கொண்ட ஒரு பெட்டியை 31,000 ம்  ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். மேலும் இதே போல் வெவ்வேறு விலைகளில் மொத்தம் 5 பெட்டி  மாம்பழங்களை  ரூ1, 24,000 ஏலத்தில் வாங்கியுள்ளார்.

மாங்காய் காய்க்க தொடங்கியதும் சந்தைக்கு வரும் முதல் பெட்டியை  ஏலம் எடுத்தால்  செல்வம் செழிக்கும் என்பது பூனே நாட்டு வணிகர்கள் இடையே இருக்கும் நம்பிக்கை  என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |