Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19-ஆம் தேதி கிடையாது…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் அரசு சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமையும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 19-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |