பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
குழுமத்தின் முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ் (83). இவர் ஜூன் 10 1938ஆம் ஆண்டு பிறந்தார். பொருளாதாரம் மற்றும் சட்டப் பிரிவுகளில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள இவர் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றிருக்கிறார். மேலும் 1968ஆம் ஆண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்றுள்ளார். இந்த பதவியை ஏற்கும் போது இப்பதவி ஏற்ற இளம் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
மேலும் ஆட்டோமொபைல் சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்டார். பத்ம பூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் பஜாஜ் ஆட்டோ தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு போன்ற காரணத்தால் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ராகுல் பஜாஜ் இன்று பிற்பகல் காலமானார்.