இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனாவின் மூன்றாவது அலை மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது வைரஸ் பரவல் குறைந்துள்ள நிலையில் மீண்டும் பள்ளி கல்லூரிகளை திறக்கும் முடிவை உத்திரப்பிரதேச மாநில அரசு கையில் எடுத்துள்ளது. அந்த வகையில் உத்திரப்பிரதேசத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் நேரில் வகுப்புகளுக்கு வரலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு வரும் 14ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. மழலையர் வகுப்புகள் உட்பட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் இப்போது நேரடி வகுப்புகள் தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. அதோடு பள்ளிக்கு வரும் மாணவர்கள் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.