உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பரிசுகளை வழங்கி பாராட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து யோகாவில் உலக சாதனை படைத்த மற்றும் திருக்குறளை சிறப்பாக ஒப்பித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட கல்வி அலுவலர் திருப்பதி, ஒருங்கிணைந்த திட்டக்குழு இயக்குனர் சிவசக்தி கணேஷ், இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், உதவி தலைமை ஆசிரியர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி மாணவர்களுக்கு பரிசு மற்றும் கேடயங்களை வழங்கி மாணவர்களை பாராட்டி உள்ளார்.