ஒரு படிப்பில் சேர்ந்து பின் அதை விட்டு வெளியேறினால் அந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு மட்டும் அந்த அபராதம் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ராமநகரில் நேற்று உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கூறியதாவது, மருத்துவம் ,என்ஜினீயரிங் போன்ற படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு ஒரே நேரத்தில் நடைபெற்று வந்தது. ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுவதால், அதற்கான இட ஒதுக்கீட்டு பணியில் சில காலதாமதம் ஏற்பட்டது.
இதனால் மருத்துவ படிப்புக்கு முன்னரே என்ஜினீயரிங் படிப்பில் பல மாணவர்கள் சேர்ந்து விட்டனர். ஆனால் இப்போது அவர்களில் பெரும்பாலானோருக்கு மருத்துவப் படிப்பு படிக்க ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. இதனையடுத்து என்ஜினீயரிங் படிப்பில் இருந்து விலகி, மருத்துவ படிப்பில் செல்கிறவர்களுக்கு சட்டப்படி அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு முதல் அந்த அபராதம் இல்லை.
அதாவது என்ஜினீயரிங் படிப்பிற்கு அவர்கள் செலுத்திய பணம் அப்படியே திருப்பி கொடுக்க வேண்டும் என கர்நாடக தேர்வாணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு படிப்பில் சேர்ந்த பின் அதை விட்டு வெளியேறினால் அந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் 5 மடங்கு அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுண்டு. ஆனால் இந்த ஆண்டு மட்டும் மாணவர்களின் நலன் கருதி, இந்த அபராதம் ரத்து செய்யப்படுகிறது .மீண்டும் அடுத்த ஆண்டுக்கு இந்த அபராதம் விதிக்கும் விதிமுறை பொருந்தும் என அஸ்வத் நாராயணன் கூறியுள்ளார்.