தமிழகம் முழுவதும் இன்று(பிப்..12) 22-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் 50,000 மையங்களில் நடைபெறும் இந்த முகாம்களில் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் பயன்பெறலாம். சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் நடைபெறும் முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இதுவரை 91 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 70.4 சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளது. இதனிடையில் தமிழகத்தில் 1 கோடி நபர்களுக்கு இன்னும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படவில்லை. ஆகவே அவர்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த தடுப்பூசி முகாமில் இரண்டாவது முறையாக தடுப்பூசி செலுத்தாதவர்கள் பயன்பெறுமாறு பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.