Categories
அரசியல்

இது நடக்க இன்னும் “7 அமாவாசை தான் இருக்கு”…. கணிச்சி சொன்ன எடப்பாடி…!!!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கரூரில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து தேர்தல் பரப்புரை ஆற்றினார். அதில் அவர் பேசியதாவது, தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் வரப் போவதாக அவர் கூறினார். அதற்கு இன்னும் 24 அமாவாசைகள் தான் உள்ளன. ஆட்சி மாறும்போது காட்சி மாறும்.

தொண்டர்கள் பலம் அதிகம் கொண்ட கட்சி அதிமுக. நமது கட்சியில் சாதாரண அடிமட்ட தொண்டன் கூட முதலமைச்சர் ஆகலாம் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், எம்ஜிஆர் ஒருமுறை சட்டமன்றத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மைக் பறிக்கப்பட்டது. அப்போது எம்ஜிஆர் அவர்கள் இனி நான் வந்தால் இந்த சட்டமன்றத்திற்கு முதல்வராக தான் வருவேன் என கூறினார். அதேபோல் முதல்வரான பிறகு தான் அந்த சட்டமன்றத்திற்கு அவர் சென்றார் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Categories

Tech |