கோவையில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயன்பெற இடைத் இடைத்தரகர்களை அணுக வேண்டாம் . என தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனளிக்கும் 2.10 லட்சம் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மாத வருமானம் 25 ஆயிரத்திற்கு கீழ் இருக்க வேண்டும். பட்டாவுடன் கூடிய சொந்த நிலம் இருக்க வேண்டும், அதோடு பயனாளியின் பெயரில் வேறு எந்த பகுதியிலும் குடியிருப்புகள் இருக்கக்கூடாது.
இந்த மானியத்தை பெறுவது தொடர்பாக அலுவலர்களுக்கோ, ஊழியர்களுக்கோ அல்லது வெளி நபர்களுக்கோ லஞ்சம் கொடுக்க வேண்டாம் எனவும் இடைத்தரகர்களை அணுக வேண்டாம் எனவும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அவ்வாறு பயனாளி லஞ்சம் கொடுக்கும் பட்சத்தில் அது நிர்வாகத்திற்கு தெரியவந்தால் அவர்களுக்கு கொடுக்கப்படும் தொகை நிறுத்தி வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏதேனும் புகார் அளிக்க விரும்பினால் 94431 30847, 75980 00422 என்ற எங்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.