நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா ரத்த தானம் செய்து கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டு ரசிகர்களிடம் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரபல நடிகையும், பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அவர் நடிப்பில் தொடர்ந்து வெளியாகி வரும் அனைத்து படங்களும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இவர் பல ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் மாபெரும் வெற்றி அடைந்தது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆண்ட்ரியா. அவ்வப்போது தனது ரசிகர்களிடம் உடல்நலம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் ஆண்ட்ரியா ரத்ததானம் அளிக்கும் புகைப்படத்தை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்துடன் சேர்ந்து ரசிகர்களிடம் பல வேண்டுகோளையும் விடுத்துள்ளார். அதில் “ஒரு நல்ல செயலை செய்ய வேண்டுமா?. அப்போ ரத்த தானம் செய்யுங்கள்! நீண்ட நாளாக நான் ரத்த தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருந்தது. அதனால் நேற்று நான் ரத்த தானம் செய்தேன் என்றும், அத்துடன் ரத்ததானம் செய்து கொண்ட புகைப்படத்தையும் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்”.