இம்ரான் கான் அரசுப் பயணமாக சீனா சென்ற போது அவரிடம் அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான உறவு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான் அரசு முறை பயணமாக கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை சீனா சென்றுள்ளார். மேலும் அங்கு பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உள்ளார். அங்கு இம்ரான்கான் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளார். அப்போது அவரிடம் அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான உறவு பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதிலில் தேவைப்படும்போது அமெரிக்கா பாகிஸ்தானுடன் உறவை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக ரஷ்யா, பாகிஸ்தான் எதிரி ஆகிறது. அமெரிக்கா தங்கள் நோக்கங்கள் நிறைவேறியவுடன் எங்களை கைவிட்டு விடுவதாகவும் மேலும் எங்கள் மீது பொருளாதார தடைகளை விதிப்பதாகவும் கூறியது. இதற்கிடையில் 1980ஆம் ஆண்டில் அமெரிக்கா எங்களுக்கு உதவியது.
ஆனால் ஆப்கானிஸ்தானை விட்டு ரஷ்யா வெளியேறிய உடன் அமெரிக்கா, பாகிஸ்தான் மீது பொருளாதார தடைகளை விதித்தது.மேலும் சீனா எங்கள் நண்பன் என்றும் கடந்த 70 ஆண்டுகளாக இருநாடுகளும் பல்வேறு கட்டங்களில் உறுதுணையாக இருந்து உள்ளோம் என்றும் மேலும் பல்வேறு காலகட்டங்களில் சீனா பாகிஸ்தானுக்கு துணையாக நின்று உள்ளது என்று கூறினார்.