Categories
தேசிய செய்திகள்

கள்ளக்காதலனின் காம இச்சைக்கு….!! 11 வயது மகளை அனுப்பி வைத்த கொடூர தாய்….!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்மிதா 33 வயதாகும் இவர் ஒரு கணவனை இழந்த பெண் ஆவார். ஸ்மிதாவுக்கு 11 வயதில் மகளும் பள்ளிக்கு செல்லும் வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் ஸ்மிதாவுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு அஜி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அஜிக்கு ஸ்மிதாவின் 11 வயது மகள் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. அதனை ஸ்மிதாவிடம் கூறி மகளை தனியாக அழைத்து வருமாறு சொல்லியுள்ளார். அதன்படி ஸ்மிதா தன்னுடைய மகளை யாரும் இல்லாத காலி வீட்டிற்கு தனியாக அழைத்து வந்துள்ளார். தொடர்ந்து அஜி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட இருவரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. முக்கிய குற்றவாளியான அஜிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 75 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. அதுபோல சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயான ஸ்மிதாவிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Categories

Tech |